Breaking News

UK: “பார்க்கிங் பெனால்ட்டியை” எவ்வாறு மேல்முறையீடு செய்வது?

0 0

நீங்கள் இரண்டு காரணங்களுக்காக மேல் முறையீடு செய்யலாம்.

  1. எந்த விதி முறைகளையும் நீங்கள் மீறவில்லை என்று நம்பும் சூழலில்.
  2. தண்டத் தொகையானது அதிகப்படிய உள்ளது என்ற காரணத்துக்காக.

தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்

  1. வாகன தரிப்பு நிறுவனங்கள் உங்களுக்கு அதிகப்படியான கட்டணம் தண்டணைப்பணமாக அறவிடுவதாக எண்ணினால் நீங்கள் உடனடியாக பணத்தை செலுத்தி விடக்கூடாது. அப்படி நீங்கள் பணத்தை செலுத்தினால் நீங்கள் தவறு செய்தவர் என்று ஒத்துக்கொண்டதாக பொருல்ப் படும்.
  2. நீங்கள் parking charge notice கொடுக்கப்பட்ட இடத்தில் parking signs இன் நிழல்ப் படம், எந்த நேரத்துக்கு திரும்பி வந்தீர்கள் என்ற ஆதாரம், உங்களிடம் receipt இருந்தால் அதையும் கவனமாக வைத்திருக்கவும்.
  3. மேல் முறையீட்டு நடைமுறை நீங்கள் முதலில் உளூராட்சிக்கோ அல்லது தனியார் வாகன தரிப்பு நிலையத்துக்கோ செய்ய வேண்டும். பெரும் பாலான தனியார் வாகன தரிப்பு நிறுவனங்கள் 14 நாட்களுக்குல் பணம் செலுத்தினால் குறைக்கப்பட்ட கட்டணம் செலுத்தலாம். இப்படி முதலில் நீங்கள் மேல் முறையீடு செய்யும் பொழுது 14 நாட்களுக்குல் பணம் செலுத்தினால் குறைந்த பட்ச கட்டணம் செலுத்தும் உரிமை பறிபோகாது. இது உங்கள் மேல் முறையீடு வெற்றி பெறவில்லை என்றாலும் குறைக்கப்பட்ட கட்டணம் செலுத்தும் வசதி இருக்கும்.
  4. தனியார் வாகன தரிப்பு நிறுவனம் BPA அல்லது IPCஇல் உறுப்பினரா என்று பாருங்கள்.மேலும்

அவர்கள் தங்கள் நடத்தை விதித் தொகுப்புக்கு (code of practice) ஏற்ற வாறு நடந்தார்களா, மேலும் உங்களுக்கு தண்டனை சீட்டை சரியாகத்தான் கொடுத்துள்ளார்களா என்றும் ஆராயவும்.

  1. தனியார் வாகன தரிப்பு இயக்குனர்கள் BPA போன்ற அமைப்புகளில் உறுப்பினர் இல்லை எனில் நீங்கள் Citizen Advice Bureau போன்ற இடங்களில் ஆலோசனை பெறலாம். RAC போன்ற நிறுவனங்களும் தமது உறுப்பினர்களுக்கு ஆலோசை வழங்குகின்றது.
  2. உங்கள் மேல் முறையீட்டை தனியார் நிறுவனம் மறுத்து விட்டால் நீங்கள் POPLAஇக்கு உங்கள் மேல்முறையீடை எடுத்து செல்லலாம். ஆயினும் தனியார் நிறுவனம் ஒரு BPAஇல் உறுப்பினராக இருக்க வேண்டும்.இந்த மேல்முறையீடு இலவசமானது ஆயினும் இந்த சூழலில் நீங்கள் குறைக்கப்பட்ட கட்டணமாக தண்டப் பணத்தை கட்டும் உரிமையை இழக்கிண்றீர்கள். மேல்முறையீட்டில் வெற்றி பெற்றால் நீங்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
  3. POPLA உங்கள் மேல்முறையீடை மாறுதல் நீங்கள் உங்கள் வழக்கை இறுதியாக Ombudsman Services இக்கு மேல்முரையீடாக எடுத்துச் செல்லலாம்.

உங்கள் மேல் முறையீடு வெற்றி பெறவில்லை என்றால் நீங்கள் உடனடியாக தண்டப்பணத்தை செலுத்துதல் ஆலோசனைக்குரியது. அப்படி தவறும் பட்சச்தில் உங்களை நீதி மன்றத்துக்கு (County Court)  எடுத்துச்செல்வார்கள்.

 

 

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *