Breaking News

UK: இப்படியும் பிரித்தானியாவில் சட்டங்கள் உண்டா?

0 0
  1. சில்லறை கேற்பது ஒரு குற்றமாகும்

 

உங்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு வாகன தரிப்பிட கட்டணத்தை செய்வதற்கு சில்லறை இல்லையெனின்  பக்கத்தில் உள்ளவரிடம் சில்லறை இருக்கா என்று கேட்டு இருக்கலாம் அல்லது வணிக நிலையங்களில்  shopping trolley போன்றவற்றுக்கு பயன்படுத்த பக்கத்தில் இருப்பவரிடம் உங்கள் பணத்துக்கு சில்லறை கேட்டு இருப்பிர்கள் ஆனால் அப்படி கேற்பது சட்டப்படி குற்றமாகும். ஏனெனில் முன் பின் தெரியாதவரிடம் சில்லறை கேற்பது the Vagrancy Act 1824 என்ற சட்டத்தின் கீழ் பிச்சை எடுப்பதற்கு சமமாகும்.

  1. இராணுவ வீரர் போல் உடை அணிவது

Seamen’s and Soldiers’ False Characters Act 1906 என்ற சட்டத்தின் கீழ் நீங்கள் இராணுவ வீரர் போல் உடையணிவது ஒரு குற்றமாகும். அட்மிரல் போல் ஆடை அணிந்தால் மூன்று மாதங்கள் உங்களை சிறையில் அடைக்கலாம்.

  1. ஒருவருடைய வீட்டு அழைப்பு மணியை அழுத்திவிட்டு ஓடுதல்

The Metropolitan Police Act 1854 என்ற சட்டத்தின் கீழ் ஒருவர் வேண்டுமென்று அயலாரின் வீட்டு அழைப்பு மணியை அடித்துவிட்டு ஓடினால் பிரித்தானிய பவுண்டுகள் £500 வரை தண்டப்பணம் அறவிடலாம்.

  1. போலந்தில் இருந்து உருளை கிழங்கு இறக்கு மதி செய்தல்

The Polish Potatoes Order 2004 என்ற சட்டத்தின் கீழ் ஒருவர் உருளைக் கிழங்கு போலந்து நாட்டில் விளைந்தது என்று தெரிந்து கொண்டு பிரித்தானியாவிக்குல்  இறக்குமதி செய்தல் குற்றமாகும். Ring rot என்ற நோய் பரவியதே இதற்கு காரம் காரணம்.

  1. பந்து அல்லது கொடியேற்றி விளையாடுதல்

The Metropolitan Police Act 1839 என்ற சட்டத்தின் கீழ் தெருவில் பட்டம் ஏற்றுதல் அல்லது விளையாடுதல் பக்கத்தில் இருப்போருக்கு தொந்தரவு கோடுக்குமாயின் உங்களிடம் பிரித்தானிய பவுண்டுகள் £500 வரை தண்டப்பணம் அறவிடலாம்.

  1. வீதியில் உள்ள நடை பாதையில் மிதிவண்டி செலுத்துதல்

Section 72 of the Highway Act 1835 என்ற சட்டத்துக்குல்  நடைபாதை என்று  தெரிந்து கொண்டு நடைபாதையில் மிதிவண்டி செலுத்துதல் சட்டத்துக்கு விரோதமாகும். இதற்க்கு தண்டனையாக £30 பிரித்தானிய பவுண்டுகள் தண்டப்பணமாக அறவிடலாம்.

 

  1. பொது இடத்தில் மதுபோதையில் இருத்தல்

Section 12 of the Licensing Act 1872 என்ற சட்டத்தின் கீழ் நீங்கள் வீதியிலோ அல்லது மதுபான கடையில் கூட ஒருவர் போதையில் இருந்தால் அது சட்டத்துக்கு விரோதமானது. அப்படி மது போதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டால் £200 பிரித்தானிய பவுண்டுகள் தண்டப்பணமாக அறவிடலாம்.

  1. கால் மதியடியை காலையில் தெருவில் சுத்தம் செய்தல்

Section 60 of the Metropolitan Police Act 1839 இன்  கீழ் உங்கள் வாசலுக்கு பயன்படுத்தும் கால் மிதியடியை காலை 8 மணிக்கு பின்னர் வீதியில் அடித்து சுத்தம் செய்தால் அது ஒரு குற்றமாகும். ஒருவர் அப்படி செய்வது உறுதி செய்யப்பட்டால் £500 பிரித்தானிய பவுண்டுகள் தண்டப்பணமாக செலுத்த வேண்டும்.

  1. சால்மன் மீனை சந்தேகப்படும் வகையில் கையாளுதல்

Salmon Act 1986 என்ற சட்டத்தின் கீழ் சால்மன் மீனை ஒருவர் சந்தேப்படும் வகையில் கையாண்டால் அது ஒரு குற்றமாகும். இது சட்டத்துக்கு விரோதமாக சால்மன் மீன் பிடிப்பதை  தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.

 

  1. பிரித்தானிய பாராளுமன்றதுக்குள் கவசம் அணிந்து செல்லுதல்

1313 ஆம் ஆண்டு King Edward II அவர்களில் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட Statutum de Defensione portandi Arma என்ற சட்டத்தின் கீழ்  பாராளமன்றத்துக்குள் ஒருவர் கவசம் அணிந்து செல்ல முடியாது. அப்படி சென்றால் அது ஒரு குற்றமாகும்.

  1. எட்டு மணிக்கு பின்னர் vacuum cleaner பயன்படுத்துதல்

இரவு எட்டு மணிக்கு மேல் பெரிதாக சத்தம் போடக்கூடாது. அப்படி சத்தம் போட்டால் அது தொல்லை கொடுப்பதற்கு சமமாகும். vacuum cleaner இல் இருந்து வருகின்ற சத்தமும் உரத்த சத்தமாக இசை ஒலிக்க விடுதல் போல் தொல்லையாக கருதப்படும். இது ஒரு சட்டத்துக்கு விரோதமான செயலாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
100 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *