Breaking News

வயதுவந்த உறவினருக்கு எவ்வாறு பிரித்தானியாவியல் நிரந்தர வதிவுரிமை பெறுவது?

0 0

18 வயதுக்கு மேற்பட்ட உறவினர்களை பிரித்தானியாவுக்கு நிரந்தரமாக குடியேறுவற்கான சட்டம் section EC-DR of Appendix FM இல் விபரிக்கப்பட்டுள்ளது.

இதன் படி: “You are the parent aged 18 years or over, grandparent, brother or sister aged 18 years or over or son or daughter aged 18 years or over of a person who is in the UK and that person is over 18 and either a British citizen, settled in the UK or a person with refugee leave or humanitarian protection status” என்று கூறுகிறது. அதாவது விண்ணப்பதாரி 18 வயதோ அல்லது அதற்கு மேற்பட்டவரா, பாட்டன், அல்லது பாட்டி, 18 வயதுக்கு மேற்பட்ட சகோதரர் அல்லது சகோதரி, மகன் அல்லது, மகள் போன்றவர்களின் 18 வயதுக்கு மேற்பட்ட நிரந்தரவதிவுரிமை, அகதி அல்லது மனிதவிமான பாதுகாப்பு அல்லது குடியிரிமை கொண்ட உறவினர் இவர்களை அழைக்க வேண்டும்.

இவ்வாறு விண்ணப்பம் செய்பவர் உறவினை நிரூபிக்க பிறப்பு சான்றிதழ் போன்ற ஆதாரத்தை கொடுக்கவேண்டும்.
விண்ணப்பதாரி அழைப்பவரின் பெற்றோர் அல்லது பாட்டி அல்லது பாட்டனாக இருக்கும் அவர்கள் துணைவர் அல்லது துணைவியுடன் உறவில் இருக்கக்கூடாது அல்லது இருவரும் விண்ணப்பிக்க வேண்டும்.

அவர்களது வயது, நோய் அல்லது ஊனம் காரணமாக இவ்வாறு விண்ணப்பிவர்கள் தமது அன்றாட கடமைகளை செய்யமுடியாதவர்களாக இருக்கவேண்டும் (As a result of age, illness or disability, you require long-term personal care, that is help performing everyday task). இவ்வாறான சூழல் சமீப காலத்தில் ஏற்பட்ட ஒன்றாகவும் இருக்கலாம்.

அடுத்ததாக, உங்கள் பிரித்தானிய குடும்ப உறுப்பினர் கொடுத்த பணம் மற்றும் நடைமுறைக்கு தேவையான உதவிகள் கிடைத்த பொழுதிலும், நீங்கள் வாழும் நாட்டில் உங்களை கவனித்து கொள்ளவோ (அதாவது தாதியரோ, கவனிப்பவரோ, உதவியாளரோ) அல்லது கவனிப்பு பெறுவதற்கு நியாயமாக வாய்ப்புகள் இல்லை என்ற சூழல் இருக்கவேண்டும் (You are unable, even with the practical and financial help of your family member in the UK, to obtain the required level of care in the country where you are living because it is not available and there is no person (close relative, home-help, housekeeper, nurse, carer, care or nursing home) in your country who can reasonably provide it, or because it is not affordable). இந்த சட்ட தேவையை நிவர்த்தி செய்வதே கடிமான காரியமாக இருக்கும். ஏனென்றால் 5 வருடங்களுக்கு அரசாங்க உதவி பெறாது உறவினரை பார்க்க முடியும் என்று வாதிடுபவர் விண்ணப்பதாரியை அவர் உள்ள நாட்டில் பணம் செலவழித்து பார்க்க முடியவில்லை என்று கூறுவது கடினமாக இருக்கும்.

இதேவேளை விண்ணப்பதாரி இருக்கும் இடத்தில் மற்றைய உறவினர்கள் இருக்கும் சூழலில் அவர்கள் பராமரிப்பை வழங்க ,முடியாதா என்ற வினாவும் எழுப்பப் படும்.

மேலதிக தகவல் தொடரும்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *