Breaking News

UK:பிரித்தானியாவில் திருமணம் ஆகாதவர் துணையுடன் வாழ எவ்வாறு வீசா பெறுவது?

0 0

திருமணம் ஆகாதவர் தமது துணைவர் அல்லது துணைவியோடு இணைவதற்கு பிரித்தானிய சட்டம் வழிவகுக்கின்றது. இந்த வீசாவானது ஒருவர் திருமணம் செய்துகொள்ள நிச்சியம் செய்யப்பட்டு இருக்கும் தருணத்தில் அவர்கள் பிரித்தானியாவுக்கு வருவதற்கு வழிவகுக்கிறது. இவ்வாறு அனுசரணை செய்பவர் ஒரு பிரித்தானிய குடிமகன், நிரந்தர வதிவிருமை பெற்றவர், ஐரோப்பிய ஒன்றிய சட்டத்துக்குள் தாற்காலிய வீசாவை பெற்றவர் (Have pre-settled status under Appendix EU) அகதி அந்தஸ்து பெற்றவர், அல்லது மனிதவிமான பாதுகாப்பு வீசா பெற்றவராக இருக்கவேண்டும். இவ்வாறு வருபவர்கள் ஆறுமாதத்துக்குல் திருமணம் செய்துகொள்ள வேண்டும். விண்ணப்பத்தை பிரித்தானியவகுக்கு வெளியில் இருந்து விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்கள் நேரடியாக நிரந்தர வதிவிருமையை பெற மாட்டார்கள்.  பிரித்தானியாவுக்கு வந்த பின்னர் துணைவர் வீசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஐந்து வருடங்கள் கழித்து அவர்கள் நிரந்தர வதிவிருமை பெறு விண்ணப்பிக்க வேண்டும்.

கவனித்து கொள்ளவேண்டியவை :

1. விண்ணப்பதாரி துணையை நேரடியாக சந்தித்து இருக்க வேண்டும்.

2. உங்கள் உறவு உண்மையானதாக இருக்கவேண்டும்

3. வேறு திருமண உறவு முற்றிலுமாக முறிவடைந்து இருக்கவேண்டும்

4, நாட்டுக்குள் வந்து 6 மாதத்துக்குமல் திருமணம் முடிக்க முடிவு செய்து இருக்கவேண்டும்

5. நிரந்தரமாக இந்த நாட்டில் வாழ எண்ணி இருக்கவேண்டும்

6. அரச உதவி இன்றி பொருளாதார ரீதியாக தம்மை பார்த்துக்கொள்ள வசதி ஒருக்கவேண்டும்

7 போதுமான தங்கும் வசதி இருக்கவேண்டும்

8. ஆங்கிலம் தேவையான அளவு  பேசவும் புறிந்து கொள்ளவும் வேண்டும்.

9. அனுமதி பெறும் விண்ணப்பதாரி குறைந்தது 18 வயது நிரம்பி இருக்கவேண்டும்.

துணியை சந்தித்து இருக்கவேண்டும் என்று கூறும் பொழுது, விண்ணப்பதாரி பிரித்தானியாவில் தன்னை அனுசரணை செய்யும் துணையை நேரடியாக சந்தித்து இருக்கவேண்டும், இது ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக இருந்து இருக்கவேண்டும். ஒருவரை வெறுமனே பாத்து விட்டு பின்னர் தொலைபேசி மூலம் பேசி அறிமுகம் ஆதல் சட்டத்தை நிவர்த்தி செய்யாது.இதன் காரணமாக உங்கள் உறவு உண்மையானதாகவும், தொடர்ந்து செல்வதாகவும் இருக்கவேண்டும்-ஒவொரு தனிப்பட்ட சூழலை வைத்து உள்துறை அமைச்சு முடிவுகள் எடுக்கும்.

உங்களுக்கு நிச்சியம் செய்யப்பட்டவருடன் நீண்டகாலம் உறவில் இருக்கிறீர்களா, உங்களுக்கு உங்கள் துணைக்கும் குழந்தை உள்ளதா, இருவருக்கும் இணைந்த பொருளாதார பொறுப்புகள் உள்ளதா, வேறுநாட்டை நீங்களும் உங்கள் துணையும் சேர்ந்து பார்க்க சென்று உள்ளீர்களா, இருவரும் சேர்ந்து வாழ்வதற்கு உறுதியா திட்டங்களை வகுத்து உள்ளீர்களா போன்ற விடயங்களை உள்துறை அமைச்சு பரிசீலனை செய்யும்.

ஒருவர் தனது நிச்சயம் செய்யப்பட்டவருடன் சேர்ந்து வாழ்த்து இருக்கவில்லை என்றால், புகைப்படம், விடுமுறைக்கு சேர்ந்து பயணித்த ஆதாரங்கள், உறவினரோடு சேர்ந்து இருந்த ஆதாரங்கள், தொடர்பில் இருந்தது தொடர்பாக ஆதாரங்கள் கொடுத்தல் அவசியம். இவ்வாறாக கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் சமீப வருடங்களில் பெறப்பட்டதாக இருத்தல்  கொடுத்தல் அவசியம்.

இவ்வாறு உறவு உண்மையானதா என்பதை நிவர்த்தி செய்ய உள்துறை அமைச்சு பல ஆய்வுகளை செய்யும் மேலும் நேர்காணல் அல்லது வீட்டுக்கு வியம் செய்யவும் நேரலாம்.

இது தொடர்பாக சட்ட ஆலோசனை தேவைப்படும் ஒருவர் தகுதி உடைய சட்ட ஆலோசகரை நாடுதல் அவசியவமாகிறது.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *